Enable Javscript for better performance
ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

    By  ஆறுமுகனேரி,  |   Published on : 20th August 2013 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆத்தூர் அருகே முக்காணியில் ஹோட்டலில் தகராறு செய்த இருவரை போலீஸôர் கைது செய்தனர்.
     முக்காணி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வேலாயுதம் (39). இவர் பஜாரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலில் 18 ஆம் தேதி இரவு அங்கு சாப்பிட வந்த நட்டார் மகன் அர்ச்சுணன், பாண்டி மகன் ஆவுடையப்பன், பத்ரகாளி மகன் மாசானம் ஆகியோர் தங்களுக்குள் தகராறு செய்துள்ளனர். இதனால் தொழிலுக்கு தொந்தரவு ஏற்பட்டதால் மூவரையும் வேலாயுதம் கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மூன்றுபேரும் வேலாயுதத்தை அவதூறாகப் பேசித் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
     இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீஸôர் வழக்கு பதிவு செய்து முக்காணி பாண்டி மகன் ஆவுடையப்பன் (24) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பத்திரகாளி மகன் மாசானம்(24) ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அர்ச்சுணனை போலீஸôர் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai