Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரி அருகே தென்காலில் உள்ள மணல் மேட்டை அகற்ற கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி அருகே தென்காலில் உள்ள மணல் மேட்டை அகற்ற கோரிக்கை

    By dn  |   Published on : 21st August 2013 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்திருநகரி அருகே தென்காலில் தண்ணீர் நீரோட்டத்தை தடுக்கும் மணல் மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆழ்வார்திருநகரிக்கும் செம்பூருக்குமிடையே தென்கால் வாய்க்காலில் ரூ. 66 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட மணல் வாய்க்காலில் தேங்கியுள்ளதால், தண்ணீர் செல்வது தடைப்படுகிறது.

    கடந்த வாரம் தென்காலில் முழுக் கொள்ளளவில் தண்ணீர் திறந்து விட்டபோது இந்தப் பாலத்தில் உள்ள மணல் மேட்டால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டு, அருகிலுள்ள வாழை பயிரிடப்பட்ட நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் திறந்து விடும்போது பெரும் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே, மழைக்காலத்துக்கு முன் தென்கால் வாய்க்காலில் உள்ள மணல் மேட்டை அகற்றி, பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai