Enable Javscript for better performance
இணையதள சேவை பாதிப்பு: 2 -வது நாளாக வங்கிப் பணிகள் முடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    இணையதள சேவை பாதிப்பு: 2 -வது நாளாக வங்கிப் பணிகள் முடக்கம்

    By dn  |   Published on : 21st August 2013 12:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எப்போதும்வென்றான், சாத்தான்குளத்தில் இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வங்கிப் பணிகள் முடங்கியது.

    எப்போதும்வென்றான் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதள சேவை திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணி முற்றிலும் முடங்கியது.

    இணைப்பு கிடைக்காததால் வங்கி மூடப்பட்டது. இதனால் வங்கியில் பணம் மற்றும் காசோலை மற்றும் பரிவர்த்தனைகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றனர். மேலும் செல்போன் இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.  பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவை கடந்த சில நாள்களுக்கு முன்னர் தொடர்ந்து 4 நாள்களாக ஓட்டப்பிடாரம் பகுதியில் செயலிழந்து பின்னர் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் எப்போதும்வென்றானிலும் தற்போது இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சாத்தான்குளம்: சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் திங்கள்கிழமை இணையதள சேவை செயல்படவில்லை. இதனால் பணம் பரிவர்த்தனை, நகைக் கடன்,காசோலை உள்ளிட்ட  பணிகள் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் இணையதளம் செயல்படாததால் வங்கிப் பணிகள் முடங்கின. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai