Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு, இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா நிறுவனர்- தலைவர் எஸ்.வி.ஸ்ரீதர்ஜி தலைமை வகித்தார்.

    மாநில துணைத் தலைவர்கள் சிப்போ ராஜேந்திரன், அருப்புக்கோட்டை கே.சங்கர், மாநிலச் செயலர் டி.எஸ்.சுரேஷ்ராஜ், மாநில பொதுச்செயலர் திருச்சி சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஒன்றியங்களிலிருந்து 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, வழிபாடு பூஜை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    முன்னதாக தென்மண்டல தலைவராக ஐ.ரவிகிருஷ்ணனும், தூத்துக்குடி மாவட்டத் தலைவராக எஸ்.நேருவும், மாவட்டச் செயலராக எ.லிங்கவேல் ஆதித்தனும், மாவட்ட பொதுச்செயலராக கே.விருமாண்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் உடன்குடி ஒன்றியச் செயலர் செல்வம், ஒன்றியத் தலைவர் சின்னத்துரை, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் என்.முருகன், நகரத் தலைவர் சி.ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணித் தலைவர் ஐயப்பன், நகர துணைத் தலைவர் முத்துகுமார், நகர பொதுச்செயலர் சுயம்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai