Enable Javscript for better performance
ஓய்வுபெற்ற காவல் உதவி-ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வுபெற்ற காவல் உதவி-ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

    By dn  |   Published on : 21st August 2013 12:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தட்டார்மடம் அருகே ஓய்வுபெற்ற காவல் உதவி-ஆய்வாளர் வீட்டில் ரூ. 1.25 லட்சம் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தட்டார்மடம் அருகேயுள்ள இடைச்சிவிளையைச் சேர்ந்த வெள்ளத்துரை மனைவி ராஜரத்னம் (59). இவர் துத்துக்குடி, திருச்செந்தூர் காவல் நிலையத்தில் உதவி -ஆய்வாளராகப் பணிபுரிந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார்.  இவரது கணவர் வெள்ளத்துரை திசையன்விளையில் நகைக் கடை  நடத்தி வருகிறார். ராஜரத்னம் திங்கள்கிழமை அவருக்கு சாப்பாடு கொண்டு சென்றாராம். பின்னர் இருவரும் இரவு வீடு திரும்பினராம். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததாம். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 50 ஆயிரம் மற்றும் மூன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.25 லட்சம்.

    இதுகுறித்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ப. அழகுதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai