Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

    By dn  |   Published on : 21st August 2013 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காயல்பட்டினத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்தவர் நைனா முகம்மது. இவர் கேரளத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா பாவீரா(21). இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறதாம். 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.

    இந்நிலையில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு மனைவி குழந்தையுடன் காயல்பட்டினம் வந்த நைனா முகம்மது மனைவி குழந்தையை ஊரில் விட்டு விட்டு திங்கள்கிழமை கேரளத்துக்குப் புறப்பட்டு சென்றாராம்.

    தன்னை தனியாக விட்டுவிட்டு சென்றதால் மனமுடைந்த பாத்திமா பாவீரா ஹேர் டையை குடித்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் அவரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.

    இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆவதால் தூத்துக்குடி கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai