Enable Javscript for better performance
கோவில்பட்டி வட்டத்தில் 3 இடங்களில் அம்மா திட்ட முகாம்: 467 மனுக்கள் ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி வட்டத்தில் 3 இடங்களில் அம்மா திட்ட முகாம்: 467 மனுக்கள் ஏற்பு

    By dn  |   Published on : 21st August 2013 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி வட்டத்தில் 3  இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 467 மனுக்கள் ஏற்கப்பட்டது.

    கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட வானரமுட்டியில் நடைபெற்ற முகாமுக்கு துணை வட்டாட்சியர் ராஜ்குமார் தலைமை வகித்தாரா. வருவாய்த் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அம்மா திட்ட முகாமை தொடங்கிவைத்தார்.

    748 மனுக்கள் பெறப்பட்டதில், 274 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 398 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 76  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  முகாமில், ஊராட்சித் தலைவர் பரமசிவம், துணைத் தலைவர் ராமர், கிராம உதவியாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கிழவிபட்டியில் நடைபெற்ற முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெகநாதன் தலைமை வகித்தார். முகாமில், மண்டல துணை வட்டாட்சியர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் மாடசாமி, கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.

    169 மனுக்கள் பெறப்பட்டதில், 92 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 44 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 33 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  வடக்குப்பட்டியில் நடைபெற்ற முகாமுக்கு, மண்டல துணை வட்டாட்சியர் ரகுபதி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் நாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் ஆதிலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இம்முகாமில், 238 மனுக்கள் பெறப்பட்டதில், 101 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 114 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 23 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai