Enable Javscript for better performance
தலைமையாசிரியையிடம் காசோலை மோசடி: அதிமுக நிர்வாகி கைது- Dinamani

சுடச்சுட

    

    தலைமையாசிரியையிடம் காசோலை மோசடி: அதிமுக நிர்வாகி கைது

    By dn  |   Published on : 21st August 2013 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் பள்ளித் தலைமையாசிரியையிடம் காசோலை மோசடி செய்த அதிமுக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியை சோமு(43). இவர், அதே பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வரும் மோகனிடம், ரூ. 2 லட்சம் கடன் கேட்டாராம்.

    இதையடுத்து மோகன், அவரது உறவினரும், அதிமுக நிர்வாகியுமான ராஜேந்திரனிடமிருந்து பணத்தை பெற்று, சோமுவிடம் கொடுத்தாராம். அதற்கு ஈடாக சோமு, ராஜேந்திரனிடம் காசோலை அளித்தாராம். பின்னர் கடனாகப் பெற்ற பணத்தை சில மாதங்களுக்குப் பிறகு சோமு, ராஜேந்திரனிடம் கொடுத்துவிட்டாராம். ஆனால்,  காசோலையை திருப்பித் தரவில்லையாம்.

    இந்நிலையில் சோமு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தாராம். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் காசோலை மோசடியில் ஈடுபட்ட ராஜேந்திரன் மீது வழக்கு  பதிவு செய்ய உத்தரவிட்டது.

    இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிந்து, திங்கள்கிழமை அவரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai