Enable Javscript for better performance
திருச்செந்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.

    திருச்செந்தூர் 4-வது வார்டு பகுதி சுப்பிரமணியபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கொடை விழாவை முன்னிட்டு காலையில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மஞ்சள் நீராட்டு மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.

    இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் முருகன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகன், துணைத் தலைவர் செந்தில்வேல், துணைச் செயலர் செந்தில்குமார், கணக்காளர் சந்தனகுமார், கொடைவிழா கமிட்டி மு.சுரேஷ்பாபு, செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai