Enable Javscript for better performance
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

    By dn  |   Published on : 21st August 2013 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.148 ஊதியமாக மத்திய அரசு வழங்க உத்தரவிட்டபோதிலும், கடந்த சில நாள்களாக கூலியில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.45 மட்டும் ஒரு நாள் கூலியாக வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலர் ரவிசந்திரன், பொருளாளர் அப்பாகுட்டி, உதவித் தலைவர் தேவாரம், இணைச் செயலர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலர் குமாரவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ். முத்து, சங்கரன், புவிராஜ், ரவீந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து, அதிகாரிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai