Enable Javscript for better performance
புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா

    By dn  |   Published on : 21st August 2013 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவையொட்டி பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

    இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் 200 பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனை வணங்கினர். மேலும் அம்மனின் வரலாற்றை பாடியவாறு பெண்கள் கும்மியடித்தனர். முளைப்பாரி ஊர்வலம் புதியம்புத்தூர் முக்கிய வீதிகள் வழியாக நந்தவனத்தில் நிறைவடைந்தது.

    இதில் அறங்காவலர் குழுத் தலைவர் புதுராஜா, செயலர் ராஜா, பொருளாளர் தர்மராஜா, துணைத் தலைவர் தங்கராஜா, புதியம்புத்தூர் ஊராட்சித் தலைவர் பொன்ராஜ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாலன், ஆறுமுகச்சாமி, கணேசன், செüந்திரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai