Enable Javscript for better performance
வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  375 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  375 பேர் கைது

    Published on : 21st August 2013 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் வருமான வரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் உள்பட 375 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    தனியாரிடம் உள்ள தூத்துக்குடி டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்தினரால் பாதிக்கப்பட்டுவரும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தூத்துக்குடியில் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி, பழைய மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநில துணை பொதுச்செயலர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார்.  தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர், தலைவர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவை மீட்கவேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட டாக் தொழிற்சாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி. காவேரி, எம்.பி. காமராஜ், வீராங்கனை அமைப்பைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு மற்றும் டாக் தொழிற்சாலை ஊழியர்கள், மீனவ அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    இந்தப் போராட்டத்தையொட்டி, மீனவர்கள் சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பிருந்து வருமானவரித்துறை அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட முயன்றதாக வேல்முருகன் உள்பட 375 பேரை மத்திய பாகம் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai