Enable Javscript for better performance
ஆலந்தலையில் திருஇருதய அற்புதக்கெபி திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலந்தலையில் திருஇருதய அற்புதக்கெபி திருவிழா கொடியேற்றம்

    By  திருச்செந்தூர்,  |   Published on : 22nd August 2013 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
     கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை திருவிழா கொடி ஊர் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கெபியை வந்தடைந்தது. தொடர்ந்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் ஆண்டகை ஏற்றினார்.
     நிகழ்ச்சியில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு இருதயராஜ் பர்னாந்து, மறை மாவட்ட பொருளாளர் சகாய ஜோசப், தூத்துக்குடி தாமஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் குமார்ராஜா, பங்குத்தந்தை அந்தோனிஜெகதீசன், அலெக்சாண்டர், ஜோசப், ஜெய்கர், ஆலந்தலை ஊர்த் தலைவர் சூசைமிக்கேல், செயலர் ஜேசு, ரொசாரி மாதா சபைத் தலைவர் ரெக்ஸ்டன் பர்னாந்து, இருதயராஜா மீனவர் சங்கத் தலைவர் ரமேஷ், செயலர் பென்ஸ்லாஸ், கிறிஸ்துராஜா மீனவர் சங்கத் தலைவர் ஜேம்ஸ், செயலர் மரியானந்தம் உள்ளிட்ட திரளான இறைமக்கள் கலந்து கொண்டனர்.
     புதிய கொடிமரத்தைச் சுற்றி ஜேசுராஜா, ரொசாரிமாதா மற்றும் புனிதர்களான சின்னப்பர், சந்தியாகப்பர், ஜெபஸ்டியர், அந்தோனியார், சவேரியார், ராயப்பர் ஆகியோரின் சொரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai