Enable Javscript for better performance
இந்து மகாசபை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அகில பாரத இந்து மகா சபையின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், உடன்குடி தேரியூர் ஆத்ம ஞான கணபதி கோவிலில் நடைபெற்றது.
     கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சு.அய்யப்பன், மாவட்ட பொதுச்செயலர் ரமேஷ், மாவட்ட கௌரவ ஆலோசகர் செல்லத்துரைபாண்டியன் முன்னிலை வகித்தனர். உடன்குடி ஒன்றியச் செயலர் முருகன் வரவேற்றார். இந்து மகாசபையின் தென்மண்டல அமைப்பு செயலர் ஏரல் சுப்புராஜ் கூட்டத்தை வழிநடத்தினார்.
     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அடி முதல் 11 அடி வரை உயரமுள்ள 508 விநாயகர் சிலைகளை மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்வது என்றும், உடன்குடியில் ஒன்றியத்தில் செப். 9-ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 11-ம் தேதி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி முன்பிருந்து நண்பகல் 12 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு பிரதான பஜார் வழியாக குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மாலை நான்கு மணிக்கு விசர்ஜனம் செய்யப்படும்.
     நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் பங்கேற்கிறார். ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் செப்.9- ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு 10-ம் தேதி சிலைகள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு தாமிரவருணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படும். கோவில்பட்டியில் செப்.9-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டு 12-ம் தேதி நகரத் தலைவர் வெங்கட்ராமன் தலைமையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வேம்பார் கடற்கரையில் விசர்ஜனம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் மாணவர், மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
     கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் பம்பை பாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவபசுபதி, மாநிலச் செயலர் புருஷோத்தமன், மாவட்ட மகளிரணித் தலைவி ஷைலஜா, மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai