Enable Javscript for better performance
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By  கோவில்பட்டி  |   Published on : 22nd August 2013 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மந்தித்தோப்பு ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
     கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சிப் பகுதியில் நிகழும் குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சீவலப்பேரி குடிநீரை தொட்டி அமைத்து தெருக்குழாய்கள் மூலம் விநியோகம் செய்ய வேண்டும்.
     தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
     இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மந்தித்தோப்பு கிளைச் செயலர் பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் மோகன்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
     முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி, மாவட்ட உதவிச்செயலர் அழகுமுத்துபாண்டியன், நகரச் செயலர் பரமராஜ், செயற்குழு உறுப்பினர் தமிழரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாலுகா செயலர் சேதுராமலிங்கம், தாலுகா உதவிச் செயலர் லெனின்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     பின்னர் போராட்டக் குழுவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரை சந்தித்து முறையிட்டனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், தங்கள் கோரிக்கைகள் குறித்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜாமணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செல்வராஜ் ஆகியோரிடம் முறையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai