Enable Javscript for better performance
சாத்தான்குளத்தில் இளைஞர் சாவு:  சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளத்தில் இளைஞர் சாவு:  சாவில் மர்மம் இருப்பதாக சகோதரி புகார்

    By  சாத்தான்குளம்  |   Published on : 22nd August 2013 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் கோவில் திருவிழாவில், கீழே விழுந்துஇளைஞர் இறந்தார். இந்நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி 6 நாள்களுக்குப் பிறகு அவரது சகோதரி செவ்வாய்க்கிழமை போலீஸில் புகார் அளித்தார்.
     சாத்தான்குளம் ஜெபஞானபுரம் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் கோவில் பூஜாரியாக உள்ளார். இவரது மகன் ஜெயகணேஷ் (25) (படம்). இவர் கோவையில் ஒரு மளிகைக் கடையில் பணிபுரிந்து வந்தார்.
     இந்நிலையில் சாத்தான்குளம் ஸ்ரீஞானகரைசுவாமி கோவில் கொடைவிழாவுக்கு கடந்த 14 ஆம் தேதி ஊருக்கு வந்தாராம். 15 ஆம் தேதி இரவு கோவிலுக்கு வந்த ஜெயகணேஷ் திடீரென கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
     இந்நிலையில், அவரது உறவினர்கள் போலீஸýக்கு தெரியாமல், அவரது சடலத்தை அடக்கம் செய்தனர். இந்நிலையில் ஜெயகணேஷின் சகோதரி முத்துபார்வதி (21) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.
     அதில் தன்னுடைய சகோதரர் ஜெயகணேஷ் சாவில் மர்மம் உள்ளது எனவும், அவரது சடலத்தை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
     அதன்பேரில் சாத்தான்குளம் போலீஸôர் வழக்குப் பதிந்தனர். ஆய்வாளர் ப.அழகுதுரை விசாரணை நடத்தி வருகிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai