Enable Javscript for better performance
செப். 7-ல் தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செப். 7-ல் தூத்துக்குடியில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி செப்டம்பர் 7-ம் தேதி தொடங்குகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார்.
     தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் தலைமையில் அரசுப் பொருள்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு ஆட்சியர் எம். ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இரா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
     கூட்டத்தில் ஆட்சியர் எம். ரவிக்குமார் பேசியது: தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் 45 நாள்கள் பொருள்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத் துறை, வனத் துறை, காவல்துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித் துறை உள்பட 26 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
     மேலும், அரசு சார்ந்த நிறுவனங்கள், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், அரசு போக்குவரத்துக்கழகம், தூத்துக்குடி மாநகராட்சி, கோ - ஆப்டெக்ஸ், தாட்கோ, கதர் கிராம கைத்தறி நூல் வாரியம், மின் வளர்ச்சிக் கழகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் போன்ற துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
     குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு அம்சங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுக் கூடங்கள், ராட்சத ராட்டினங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தினமும் கலாசார நடனங்கள், நாடகங்கள், இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
     தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பொருள்காட்சி நடைபெறும். இந்தப் பொருள்காட்சி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai