Enable Javscript for better performance
டிப்பர் லாரி மோதல்: துறைமுக ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் புதன்கிழமை, மொபெட்டில் சென்ற துறைமுக ஊழியர், டிப்பர் லாரி மோதி இறந்தார்.
     தூத்துக்குடி பண்டாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (52). தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவர், தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த டிப்பர் லாரி அவர் மீது திடீரென மோதியதாம். இதில் அவரது வலது கால் பகுதியில் மூட்டுக்கு கீழ் முழுமையாக துண்டானது. தென்பாகம் போலீஸôர் சென்று அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
     அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவர் இறந்தார். விபத்து குறித்து தென்பாகம் போலீஸôர் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான திருநெல்வேலி பாலாமடையைச் சேர்ந்த இசக்கிபாண்டியை (34) கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai