Enable Javscript for better performance
திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில்  பௌர்ணமி சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில்  பௌர்ணமி சிறப்பு பூஜை

    By  திருச்செந்தூர்  |   Published on : 22nd August 2013 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
     திருச்செந்தூர் சன்னதி தெருவிலுள்ள ஸ்ரீ அகத்தியர் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு அகத்திய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
     தொடர்ந்து அகத்தியர் நாம வழிபாடு, தீபவழிபாடு, திருமுறை பாராயணம் மற்றும் மகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
     ஏற்பாடுகளை பொதிகை மலை புனித யாத்திரை குழுவினர் மற்றும் செந்தில் பொதிகை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai