Enable Javscript for better performance
தூத்துக்குடியில் ஆக. 25-ல்  சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன்  நூற்றாண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஆக. 25-ல்  சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்லப்பாண்டியன்  நூற்றாண்டு விழா

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ்.செல்லப்பாண்டியனின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது.
     தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரான எஸ். செல்லப்பாண்டியனின் நூற்றாண்டு விழா, தூத்துக்குடி ராமையா மஹாலில் ஆகஸ்ட் 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
     விழாவுக்கு, நூற்றாண்டு விழா குழுத் தலைவர் ஜோ.வில்லவராயர் தலைமை வகிக்கிறார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் ஜஸ்டின் (தெற்கு), கதிர்வேல் (வடக்கு), சட்டப்பரேவை முன்னாள் உறுப்பினர் ஓ.எஸ். வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நூற்றாண்டு விழாக்குழு செயலர் ஏபிசிவி சண்முகம் வரவேற்று பேசுகிறார்.
     இந்த விழாவில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் இ. எம். சுதர்சனநாச்சியப்பன் கலந்துகொண்டு, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் எஸ்.செல்லப்பாண்டியனின் நூற்றாண்டு நினைவு தபால் உறையை பெற்றுக்கொண்டு, சிறப்பு மலரை வெளியிடுகிறார்.
     சிறப்பு மலரை மக்களவை முன்னாள் உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எஸ். செல்லப்பாண்டியன் நூற்றாண்டு விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai