Enable Javscript for better performance
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில், எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
     தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் பல்வேறு வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
     பின்னர், நோயாளிகள் தெரிவித்த குறைகளை உடனடியாக சரிசெய்யும்படி அரசு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
     கண் சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
     இந்த ஆய்வின்போது, மருத்துவமனையின் முதன்மையர் எட்வின்ஜோ, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.தனம், அதிமுக ஊராட்சிச் செயலர் எம்.சி.பி.ஜீவா பாண்டியன், நிர்வாகிகள் கந்தன், பேச்சிமுத்து, சரவணன், ஜே.டெரன்ஸ், சண்முகராஜா, ஜெய்கணேஷ், ஏ.எஸ்.அருணாசலம், மா.தர்மசீலன், அருண்குமார், ஆர்.எல்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai