Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில்  அம்மா திட்ட முகாம்: 29,788 மனுக்கள் மீது தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மாவட்டத்தில்  அம்மா திட்ட முகாம்: 29,788 மனுக்கள் மீது தீர்வு

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா சிறப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 29,788 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டாண்டில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 598 இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
     பட்டப்படிப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்த பெண்கள் 7,892 பேருக்கு ரூ.29 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் திருமண உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 27,787 மாணவர், மாணவிகளுக்கு ரூ.48 கோடியில் விலையில்லா மடிக்கணினியும், பசுமை புரட்சி ஏற்படுத்தும் வகையில் 1,407 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 38 லட்சத்து 86 ஆயிரத்து 50 விலையில்லா கறவை மாடுகளும், 7,788 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 98 லட்சத்து 6 ஆயிரத்து 500 விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
     இதேபோல முதல்வரின் சிறப்பு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 14,795 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மாதந்தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி 7,755 மெட்ரிக் டன் வழங்கப்படுகிறது.
     ஏழை, எளிய மக்களுக்கு நன்மை கிடைக்கும் அம்மா திட்டம் சிறப்பு முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அம்மா திட்டம் சிறப்பு முகாமில் இதுவரை 62,482 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
     இதில் 29,788 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 13,566 மனுக்கள் நிலுவையில் உள்ளன. கிராம மக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக இதன்மூலம் பெற்று வருகின்றார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai