Enable Javscript for better performance
தோல் பொருள்கள் பயிற்சி  பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தோல் பொருள்கள் பயிற்சி  பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

    By  தூத்துக்குடி,  |   Published on : 22nd August 2013 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்ற தோல் பொருள்கள் குறித்த பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
     மத்திய அரசின் தோல் பொருள்கள் பயிற்சி மையம் மற்றும் தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தோல்பொருள்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் நடைபெற்றது.
     விழாவுக்கு, தென்மண்டல கூடுதல் தொழில்துறை ஆலோசகர் ஜி. சண்முகநாதன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. கலந்துகொண்டு பயிற்சி முடித்த 152 பயனாளிகளுக்கு சான்றிதழ்களையும், கடனுதவி பத்திரங்களையும், மரக்கன்றுகளையும் வழங்கினார்.
     நிகழ்ச்சியில், திருச்செந்தூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கோவர்த்தனன், உதவி மேலாளர்கள் சரவணக்குமார், அய்யனார் லிங்கம், ஹார்ட் சமூக சேவை நிறுவன இயக்குநர் லோபோ ஜெயசீலன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே. கென்னடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai