Enable Javscript for better performance
நடிகர் விஜய் உறவினரின்  தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    நடிகர் விஜய் உறவினரின்  தூத்துக்குடி ஏற்றுமதி நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் விஜய்க்கு உறவினர் ஆவார்.
     தூத்துக்குடி பனிமய மாதா கோவில் அருகேயுள்ள கெரோப்தெருவில் இன்டேவ் என்ற ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. இந் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை தம்புசெட்டிதெருவில் உள்ளது. இதன் உரிமையாளர் சேவியர் பிரிட்டோ. இவர், நடிகர் விஜய்க்கு உறவினர் ஆவார். சேவியர் பிரிட்டோ சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். இவரது மகள் சிநேகா பிரிட்டோ சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இயக்குநர். இந்நிலையில், வருமான வரி ஏய்ப்பு செய்ததாக சேவியர் பிரிட்டோ மீது புகார் எழுந்தது. இதையடுத்து, தூத்துக்குடி கெரோப் தெருவில் உள்ள ஏற்றுமதி நிறுவன அலுவலகம் மற்றும் துறைமுக புறவழிச் சாலையில் உள்ள குடோன் ஆகியவற்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை 9.30 முதல் பகல் 2 மணி வரை சோதனை மேற்கொண்டனர்.
     வருமானவரித் துறை மதுரை மண்டல இயக்குநர் அய்யம்பெருமாள் தலைமையில் 14 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடித்த பிறகு அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது அவர்கள் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai