Enable Javscript for better performance
மாணவர் காயம்:ஆசிரியரிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே பள்ளி மாணவரின் கன்னத்தில் ஆசிரியர் அடித்ததில் மாணவருக்கு காயம் ஏற்பட்டது.
     காயமடைந்த மாணவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
     கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வாயீசன் (12). இவர், கோவில்பட்டி சுபா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
     புதன்கிழமை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற இவரை ஆசிரியர் ரவி, தலையில் ஷாம்பு தேய்த்து குளித்ததற்காக கண்டித்தாராம். பின்னர் அவரது கன்னத்தில் அடித்தாராம்.
     மாலை வீட்டுக்கு சென்ற மாணவர், தனக்கு தலை மற்றும் முகங்களில் வலி இருப்பதாகவும், ஆசிரியர் தன்னை அடித்ததாகவும் பெற்றோரிடம் கூறினாராம். இதையடுத்து, மாணவன் வாயீசனை பெற்றோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
     இதுகுறித்து திருவேங்கடம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai