Enable Javscript for better performance
ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா,உடன்குடி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
     உடன்குடி பிரதான பஜாரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலர் நடராஜன் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்தார். மாவட்ட காங்கிரஸ் செயலரும்,உடன்குடி பேரூராட்சி உறுப்பினருமான அன்புராணி சர்க்கரை பொங்கல் வழங்கினார். மாவட்ட காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி. பிரிவு துணைத்தலைவர் பூவெழில், மத்திய அரசின் சாதனைகள், ராஜீவ் காந்தியின் பெருமைகள் குறித்து பேசினார்.
     விழாவில் வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் தேவராஜ், சிறு நாடார்குடியிருப்பு ஊராட்சித் தலைவி கமலம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் சுலோச்சனா, நகர காங்கிரஸ் துணைத் தலைவர் துரைராஜ் ஜோசப்,வட்டார சேவாதள தலைவர் முருகேசன்,நகர காங்கிரஸ் செயலர்கள் சித்திரைபாண்டியன், செந்தில், வட்டார காங்கிரஸ் செயலர்கள் அமிர்தராஜ், நம்பி, மாயாண்டிதாஸ், எஸ்சிஎஸ்டி பிரிவு வட்டார தலைவர் சித்திரைவேல், லட்சுமிபுரம் கிளை தலைவர் சித்திரைபாண்டியன்,முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஞானராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். நகர காங்கிரஸ் தலைவர் இ.ஆனந்தன் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai