Enable Javscript for better performance
வாலிபால்: கால்டுவெல் பள்ளி அணிகள் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    வாலிபால்: கால்டுவெல் பள்ளி அணிகள் முதலிடம்

    By  தூத்துக்குடி  |   Published on : 22nd August 2013 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்ற வட்டார அளவிலான வாலிபால் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி அணி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர்.
     தூத்துக்குடி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏபிசி வீரபாகு மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. இதில், வாலிபால் போட்டியில் கால்டுவெல் பள்ளி அணி வீரர்கள் 14 வயதுக்குள்பட்ட ஜூனியர் பிரிவு, 17 வயதுக்குள்பட்ட சீனியர் பிரிவு, 19 வயதுக்குள்பட்ட சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்து மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனர். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை பள்ளித் தாளாளர் ஆஸ்டின், தலைமையாசிரியர் பிரபாகரன் திருத்துவக்குமார் சாம்சன் ஆகியோர் பாராட்டினர்.
     இதேபோல, மாணவர்களை ஊக்குவித்த உடற்கல்வி இயக்குநர் செ. பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் எட்வின்தேவதாஸ், சோ. முத்துக்குமார், பயிற்சியாளர்கள் சீனிவாசன், பவுன்ராஜ், ஜூடு ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai