ஸ்ரீவைகுண்டம் தென்காலில் அமலைச் செடிகள் அகற்றும் பணி
By ஸ்ரீவைகுண்டம், | Published on : 22nd August 2013 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலில் அமலைச் செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் செவ்வாய்க் கிழமை ஈடுபட்டனர்.
தாமிரவருணி ஆற்றின் கடைசி அணையான ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து பிரியும் வடகாலில் சில தினங்களுக்கு முன் பட்டுபோன மரங்கள், அமலை மற்றும் நீர்ச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதனால் கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் தங்கு தடையின்றி செல்கிறது.
இந்நிலையில் தென்காலில் உள்ள பாலங்களில் தேங்கியுள்ள அமலை மற்றும் நீர்ச் செடிகளை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இப் பணிகளை தென்கால் உதவிப் பொறியாளர் மாரிமுத்து பார்வையிட்டார்.
அமலைச் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறையினரை விவசாயிகள் பாராட்டினர்.