Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரி வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி வாடகை கார் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

    By ஸ்ரீவைகுண்டம்  |   Published on : 23rd August 2013 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்திருநகரி தாமிரவருணி ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியிடம் ஆழ்வார்திருநகரி வட்டார ஓட்டுநர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்து வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்ததாக வியாழக்கிழமை அதிகாலையில் வாடகை வேன் ஓட்டுநர்களான புதிய செல்வன் மீதும் வாகனங்களை நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தியதாகக் கூறி  சுரேஷ் மற்றும் திலிப்குமார் ஆகியோர் மீதும் ஆழ்வார்திருநகரி காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்தார். இதையடுத்து ஆழ்வார்திருநகரி போலீஸார் பொய்யான வழக்குப் பதிவு செய்து இருப்பதாகக் கூறி ஆழ்வார்திருநகரி வட்டார ஓட்டுநர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சங்கத் தலைவர் சுடலைமுத்து நாம் தமிழர் கட்சி ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் சுடலை, ஆழ்வார் ஒன்றிய இம்மானுவேல் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவரும், தேமுதிக ஒன்றிய துணைச் செயலருமான பூலான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எஸ்சி, எஸ்டி புறநகர் மாவட்டத் தலைவர் முருகேசன் ஆகியோரது தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. பழனிக்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai