Enable Javscript for better performance
இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் - Dinamani

சுடச்சுட

    

    இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

    By சாத்தான்குளம்  |   Published on : 23rd August 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    இம்முகாமில் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் 18 வயதிற்குள்பட்ட பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை, கால் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறனுடைய குழந்தைகள் பங்கேற்றுப் பயன்பெறலாம்.

    பங்கேற்க வரும் குழந்தைகள் பாஸ்போர்ட் அளவு போட்டோ 4, ரேஷன்அட்டை ஜெராக்ஸ் 1 ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

    மேலும் காலிபர், ஸ்பிளிண்ட், மூன்று சக்கர நாற்காலி, கார்னர் சேர், சி.பி.சேர் ஊன்றுகோல், மூக்கு கண்ணாடி, செவித்துணைக் கருவி, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுடலை மணி தெரிவித்தார். முகாமை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துப்பிள்ளை தொடங்கி

    வைக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai