Enable Javscript for better performance
காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் - Dinamani

சுடச்சுட

    

    வழக்கில் ஆஜராகாத களக்காடு காவல் ஆய்வாளருக்கு திருச்செந்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

    வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி ஜெயலெட்சுமி (51). 17.7.2004-ல் ஆத்தூரில் இவரது கழுத்திலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை 2 பேர் பறித்துச் சென்றனர். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார் விசாரணை செய்து, ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த கருணைமகராஜா மகன் செல்வராஜ் (26) மற்றும் ஓவுரெட்டி மகன் கார்த்திகேயவீரஅர்ச்சுணராஜா (23) ஆகியோரை கைது செய்து, திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இப்போது செல்வக்குமார் காவல் ஆய்வாளராக களக்காட்டில் பணியாற்றி வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு  திருச்செந்தூர் நீதிமன்றம் இவருக்கு சம்மன் அனுப்பியது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அவர் இதுவரை ஆஜராகவில்லை என்பதால், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் நம்பிராஜன் கடந்த 19.8.2013-ல் செல்வக்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai