Enable Javscript for better performance
கோவில்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் சுமை தூக்கும் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    வடக்குத் திட்டங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் செண்பகராஜ் (29). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கோவில்பட்டியில் உள்ள கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.  தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai