Enable Javscript for better performance
செயல்படாத மத்திய அரசு: எச்.ராஜா- Dinamani

சுடச்சுட

    

    :மத்தியில் காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறினார்.

    விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஆடிட்டர் ரமேஷ் கொலை ஆகியவற்றை கண்டித்து ஆத்தூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதன்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக உள்ளது. பொருளாதாரத்தை பாதுகாக்க தவறிவிட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கம் அதிகரித்து விட்டது.

    இவற்றுக்கு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம்தான் காரணம்.

    ஆன்லைன் வர்த்தகத்தினால் செல்வந்தர்கள் மேலும் செழிப்படைகின்றனர். ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டைச் சுற்றி அனைத்துப் பகுதிகளிலும் சீனா மற்றும் பாகிஸ்தான் தளம் அமைத்து விட்டனர். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. நாட்டின் கடன் குறைக்கப்பட்டிருந்தது. அணுகுண்டு சோதனை செய்து நாம் வல்லரசு என உலகுக்கு எடுத்துரைத்தோம்.

    இப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் கடன்சுமை அதிகரித்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்னை தீரும். தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும் என்றார் அவர்.

    கூட்டத்துக்கு ஆழ்வார் திருநகரி ஒன்றிய பாஜக தலைவர் ஏ.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.வீரமணி, ஒன்றிய பொதுச்செயலர் ப.ஜவஹர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏ.என்.ராஜகண்ணன், மாவட்டத் தலைவர் கனகராஜ், கோட்டப் பொறுப்பாளர் ராஜா, பிரசார அணித் தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட பொதுச்செயலர் வி.எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai