சுடச்சுட

    

    தடுப்புக் காவல் சட்டத்தில் இருவர் சிறையில் அடைப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 23rd August 2013 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் சில்வர்ஸ்டார் (34). ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மங்களாபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (24). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியதாக அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து இருவரும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சாமிநாதன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, சில்வர்ஸ்டார் மற்றும் சுடலைமுத்துவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai