Enable Javscript for better performance
நாலுமாவடியில் ரத்ததான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய வளாகத்தில் மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கமும் இணைந்து ரத்ததானமுகாமை வியாழக்கிழமை நடத்தின. 

    டாக்டர் அன்புராஜன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இயேசு விடுவிக்கிறார் ஊழியர்கள், ரத்ததான கழக உறுப்பினர்கள், புதுவாழ்வு சங்கத்தினர்கள் 72 பேர்கள் ரத்த தானம் வழங்கினர். இதில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி ஊழியர்கள் டாக்டர் ஆர்.சாந்தி தலைமையில் செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இம்முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.பார்த்திபன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜி.வடிவேலு, சுகாதார ஆய்வாளர் கே.சுப்பிரமணியன், மருந்தாளுநர் சி.ஆண்ட்ரூ, சுகாதார செவிலியர்கள் கே.சகாயராணி, வி.விஜிமலர், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் சித்தரஞ்சன்தாஸ், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் புது வாழ்வு சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai