Enable Javscript for better performance
பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி:எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி:எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி

    By ஆறுமுகனேரி,  |   Published on : 23rd August 2013 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :காயல்பட்டினத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி ஏ அணி வெற்றிபெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி மற்றும் எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பைகளுக்கான பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான 18-ம் ஆண்டு கால்பந்து சுற்றுப் போட்டி கடந்த 15-ம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் 10 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளி ஏ அணியும், பிரகாசபுரம் ஜேம்ஸ் நினைவு மேல்நிலைப் பள்ளி  அணியும் மோதின. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரகாசபுரம் ஜேம்ஸ் நினைவு மேல்நிலைப் பள்ளியின் தலைமைஆசிரியா தங்கராஜ் பொன்னையாவுக்கு இரண்டு அணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    இறுதி போட்டியில் எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று ஹாஜி எல்.கே.லெப்பைத்தம்பி நினைவு சுழற்கோப்பையை தட்டிச் சென்றனர். பிரகாசபுரம் அணிக்கு எஸ்.ஏ.சுலைமான் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவுக்கு திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai