Enable Javscript for better performance
மத்திய கலால் வரித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய கலால் வரித்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் நியமனம்

    By கோவில்பட்டி,  |   Published on : 23rd August 2013 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லை மண்டல மத்திய கலால் வரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினராக கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய நெல்லை மண்டல மத்திய கலால் வரித் துறை ஆலோசனைக் குழு உறுப்பினராக கோவில்பட்டி நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் துணைத் தலைவர் ராஜு நியமிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல மத்திய கலால் வரித்துறை உதவி ஆணையர் தனசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    இவரின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ராஜுவுக்கு கோவில்பட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பழனிசெல்வம், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பரமசிவம், செயலர் சேதுரத்தினம், பொருளாளர் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் ராஜவேல், செயலர் கதிர்வேல் மற்றும் பொருளாளர் செல்வமோகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai