Enable Javscript for better performance
மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    திருச்செந்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சதீஸ்பாலன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாத்ராக், செயலர் ஜெ.திலிப்குமார், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபுதாஸ், திருச்செந்தூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதித்துறை நடுவர் நம்பிராஜன், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.  விழாவில் வழக்குரைஞர்கள் கார்த்திகேயன், ராமகிருஷ் ணன், சந்திரசேகரன், நடேசஆதித்தன், கண்ணன், அரசு வழக்குரைஞர் ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai