Enable Javscript for better performance
மின்வயர் திருட்டு: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே மின்வயர் திருடியவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அருளானந்தம் (49). இவர், சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிக்குளத்தில் உள்ள தனியார் முந்திரி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாராம். இவர், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில்  150 மீட்டர் மின்வயர் வைத்து மின்வேலி அமைத்திருந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதனை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய உதவி- ஆய்வாளர் கற்பகவள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    புதன்கிழமை அவர் தலைமையிலான போலீஸார் பேய்க்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது  போலீஸாரை கண்டதும் ஓடியவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் மல்லல்புதுக்குளத்தை சேர்ந்த  கிருஷ்ணசாமி (55) எனவும், அவர்தான் மின்வயரை திருடியவர் எனவும் தெரியவந்தது. அதன்பேரில் அவரை கைது செய்து மின்வயரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai