Enable Javscript for better performance
முறைகேடாக தாது மணல் அள்ளியவர்களை கைது செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    முறைகேடாக தாது மணல் அள்ளியவர்களை கைது செய்ய வேண்டும்

    By தூத்துக்குடி,  |   Published on : 23rd August 2013 04:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலோரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளிய நிறுவனங்களின் உரிமையாளர்களை கைது செய்து, அவர்களது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடற்கரையோரங்களில் கடந்த 20 ஆண்டுகளாக சட்டவிரோதமாக கனிமங்களை சுரண்டி கொள்ளையடித்த கும்பல்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும். தமிழகம் மற்றும் கேரள கடற்கரையோரங்களில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி எந்த நிறுவனமும் தாது மணல் அள்ளக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

    கடற்கரைகளில் மணல் அள்ள இனிமேல் யாருக்கும் உரிமம் வழங்கக் கூடாது. தாது அள்ளுவோருக்கு சாதகமாக செயல்பட்ட அரசு அதிகாரிகளை விசாரணைக்கு உள்படுத்தி தண்டிக்க வேண்டும். மணல் அள்ளுபவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தாது மணலை பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும்.

    மீன்வளத்துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட மீனவ மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து கருத்து கேட்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தியதுபோல திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆய்வு நடத்த வேண்டும் என்றார் அவர்.

    பேட்டியின்போது, மறை மாவட்ட முதன்மைக் குரு செல்வராஜ், மீனவர்சமூக கல்வி மைய இயக்குநர் லெரின் டிரோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai