Enable Javscript for better performance
விவேகானந்தர் ஜயந்தி ரதத்துக்கு வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தர் ஜயந்தி ரதத்துக்கு வரவேற்பு

    By சாத்தான்குளம்,  |   Published on : 23rd August 2013 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொம்மடிக்கோட்டை ஸ்ரீசங்கரா பகவதி கலை அறிவியல் கல்லூரிக்கு வியாழக்கிழமை வந்த விவேகானந்தர் 150-வது ஜயந்தி ரதத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இக்கல்லூரிக்கு வந்த ரதத்துக்கு கல்லூரிச் செயலர் ஆனந்தா டி. அமிர்தம் தலைமையில், இணைச் செயலர் ஜி. காசியானந்தம் முன்னிலையில் கல்லூரி முதல்வர் சி.நாகராஜன், துணை முதல்வர் எஸ்.மகேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் விவேகானந்தர் கொள்கை நெறியுடன் கூடிய வலிமையான பாரதம் படைப்போம் என மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி முதல்வர் சி.நாகராஜன், தமிழ்த்துறைத் தலைவர் பா.பாலகிருஷ்ணன், கணினித்துறை பேராசிரியர் அ.கோபிகண்ணன் ஆகியோர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அறிவுரைகள் குறித்துப் பேசினர். பின்னர் அந்த ரதம் உடன்குடி புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai