Enable Javscript for better performance
அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்

    By தூத்துக்குடி,  |   Published on : 24th August 2013 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அதிமுக வழக்குரைஞர்கள் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விநியோகித்தனர்.

    தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணிச் செயலர் யு.எஸ்.சேகர் தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

     வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதியை ரூ. ஐந்தரை லட்சமாக உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தும், நீதித் துறைக்கு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவித்தும் துண்டுப் பிரசுரத்தில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

    நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தாமஸ்பாண்டியன், மாநகரச் செயலர் ஏசாத்துரை, சிறுபான்மை பிரிவுச் செயலர் எஸ்.டேனியல்ராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் ஜோதிமணி, வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், சுகந்தன் ஆதித்தன், செந்தில்குமார், அதிசயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai