Enable Javscript for better performance
அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில் ஒதுக்கீடு: ஆட்சியர் - Dinamani

சுடச்சுட

    

    அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளில் ஒதுக்கீடு: ஆட்சியர்

    By தூத்துக்குடி,  |   Published on : 24th August 2013 04:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உளள அரசு குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளைப் பெற அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

     தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டப்பகுதிகளில் 6 மாதங்களுக்கு மேல் அரசு ஊழியர்களிடமிருந்து கேட்பு இல்லாமல் காலியாக இருக்கும் குடியிருப்புகளை தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய அரசு

    ஆணையிட்டுள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி வீட்டு வசதி வாரியத்தின் கீழ் வரும் வி.வி.டி சாலை (அண்ணாநகர்) கோரம்பள்ளம், சங்கராப்பேரி, கணேசநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டப் பகுதிகள் தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

    என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai