Enable Javscript for better performance
அறிவியல் கண்காட்சி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் கண்காட்சி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்

    By கோவில்பட்டி,  |   Published on : 24th August 2013 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர், மாணவிகள் மாநில புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் தூத்துக்குடி மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு மாணவி கே.மந்திரவள்ளி, பி.திருச்சிற்றம்பலம், கே.குமார், 10-ம் வகுப்பு மாணவி எஸ்.சிவசங்கரி ஆகியோர் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற தேர்வு பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டி, 31 மற்றும் செப்.1 ஆகிய  தேதிகளில் மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai