Enable Javscript for better performance
ஆறுமுகனேரி,ஆக.23:காயல்பட்டினம் நெய்னார் - Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினம் நெய்னார் தெருவில் பாதியில் நிறுத்தப்பட்ட  சாலைப்பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

    காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பாபள்ளித் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியைக் கொண்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இச்சாலைப் பணிகளில் முறைகேடுகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும், உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்யுமாறும், ஊழல் எதிர்ப்பு இயக்க அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.நெய்னார் தெரு தவிர இதர அனைத்துப் பகுதிகளிலும் புதிய சாலை அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. நெய்னார் தெருவில் மட்டும் இடைநின்று போன சாலைப்பணிகள் தொடரப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டதால், பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நெய்னார் தெருவில் இடையில் நின்றுபோன சாலைப்பணிகளை, நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளர் கனகராஜ் நேரில் ஆய்வு செய்தார். அவருடன், காயல்பட்டினம் நகராட்சிப் பொறியாளர் சிவகுமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவிப் பொறியாளர் செந்தில்குமார், நெய்னார் தெரு சாலை ஒப்பந்தக்காரர் தலவாணிமுத்து ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

    சென்னையிலுள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்தின் உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதிகாரிகள்

    தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai