Enable Javscript for better performance
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரியில் மின்வாரிய அலுவலகத்தை சண்முகபுரம் சமுதாய நலக்கூடத்திற்கு இடம் மாற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகரச் செயலர் பி.ஆனந்தவேல் தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர்கள் என்.ராமநாதன், ஏ.சக்திகனி, உதவிச்செயலர்கள் எஸ்.சிவபெருமாள், வி.பொன்மணி மற்றும் பேயன்விளை கிளைச் செயலர் எஸ்.துரைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டச் செயலர் ஏ.மோகன்ராஜ் மற்றும் திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் வி.நடேசஆதித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச்செயலர் பி.கரும்பன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் இ.கிருஷ்ணராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.பரமசிவன், கிராமிய பாடகர் ஏ.இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai