உடன்குடி அருகே நிலத்தரகர் தற்கொலை
By உடன்குடி | Published on : 24th August 2013 04:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உடன்குடி அருகே தேரியூரில் நிலத்தரகர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேரியூரைச் சேர்ந்தவர் சந்திரலிங்கம் மகன் முருகேசன்(38). இவர், நிலங்கள் வாங்கி விற்பது மற்றும் அருகில் உள்ள கோவிலில் பூஜை வேலைகள் செய்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற குலசேகரன்பட்டினம் போலீஸார் சடலத்
தை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து
வருகின்றனர்.