Enable Javscript for better performance
கழுகுமலையில் பாஜக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கழுகுமலையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழா மற்றும்  மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கழுகுமலை காந்தி மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு நகரப் பொறுப்பாளர் சென்னராயப்பெருமாள் தலைமை வகித்தார்.

    மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றியத் தலைவர் பெருமாள்சாமி மற்றும் ஒன்றிய பொதுச்செயலர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், மாநிலச் செயலர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலர் சரவணப்பெருமாள், மாவட்டத் தலைவர் கனகராஜ் ஆகியோர் பேசினர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலர் வீரமணி, மாவட்ட பொதுச்செயலர் பிரபு, இளைஞரணிச் செயலர் மாரிச்செல்வம், மாவட்ட அமைப்புச் செயலர் பாலாஜி, மாவட்டச் செயலர் சிவந்திநாராயணன், இளைஞரணி மாவட்டத் தலைவர் சந்தனக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிவராமன், ஹரிபாலகிருஷ்ணன், போஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ஒன்றியச் செயலர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமிர்தபாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட துணைத் தலைவர் சுந்தரமுர்த்தி செய்திருந்தார்.

    முன்னதாக கழுகுமலை பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கட்சிக்

    கொடியேற்றினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai