Enable Javscript for better performance
கோவில்பட்டி பள்ளியில் நாணயக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

    கண்காட்சிக்கு பள்ளி நிறுவனர் எவரெஸ்ட் மா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தொழிலதிபர் அழகேசன் கண்காட்சியை திறந்து வைத்துப் பார்வையிட்டார். கஸ்தூரி அழகேசன் குத்துவிளக்கு ஏற்றினார். இக்கண்காட்சியில் நாட்டின் கலாசாரம், பண்பாட்டை அறியும் வகையில் இந்தியா மற்றும் குவைத், ரஷியா, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மற்றும் புழக்கத்தில் உள்ள நாணயங்கள், டாலர்கள், ரூபாய் நோட்டுகள், சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்கள், அணா நாணயங்கள் இடம்பெற்றிருந்தன. பள்ளித் தலைமையாசிரியை சுசிலாதேவி வரவேற்றார். ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai