Enable Javscript for better performance
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் தேரோட்டம்

    By திருச்செந்தூர்,  |   Published on : 24th August 2013 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு வெயிலுகந்தம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை ஆவணித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

    இக்கோவிலில் ஆவணித்திருவிழா 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணியளவில் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் (பொ) ம.அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் பூதலிங்கம், திருவிழா பணியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சண்முகவிலாசத்தில் எழுந்தருளி சண்முகருக்கு எதிர்சேவை தீபாராதனை ஆகி, வீதி வலம் வந்து திருக்கோவில் சேர்ந்தார். இதையடுத்து திருவிழா நிறைவு பெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai